சுயநலவாதி
சுயநலவாதி
நான் யாரையும்
அடிமை படுத்துவது இல்லை
ஏனெனில்
நான் யாருக்கும் அடிமையாக
விரும்புவது இல்லை!
நான் யாரையும்
பயப்பட வைப்பதும் இல்லை
ஏனெனில்
நான் யாருக்கும் பயப்பட
விரும்புவது இல்லை!
நான் பிற
பெண்களை ஏறெடுத்தும் பார்ப்பதில்லை
ஏனெனில்
பிற ஆண்கள் என்னவளை
ஏறெடுத்து பார்க்காதிருக்க
நான் பிற
உயிர்களை துன்புறுத்துவது இல்லை
ஏனெனில்
என்னுயிரை யாரும் துன்புறுத்தாது
இருக்க வேண்டியே
மேலும் நான்
அதிர்வின்றி நடப்பதும்
பணிவாக பேசுவதும்
அளவாக உண்பதும்
ஆழமாக சுவாசிப்பதும்
நாகரிகமாக பழகுகுவதும்
பேதம் கடந்து நேசிப்பதும்
எல்லாமே எனக்காகத்தான்
எனக்காக மட்டும்தான்
என்னுள் ஒளிந்திருக்கும்
என் சுயனலத்திர்க்காகத்தான்!
இப்படி எண்ணற்ற
சுயநலங்கள் என்னுள்
என் சிந்தனைகளில்
என் செயல்களில்!
பொதுநலம் என்பது மரம்
எனில்
சுயநலம் என்பது அதன்
வேர் என்பேன்!
பொதுநலம் என்பது காட்டுத்தீ
எனில்
சுயநலம் என்பது அதை
பற்றவைத்த தீப்பொறி என்பேன்!
நல்ல சுயநலங்களில்தான்
உலகம் போற்றும்
பொதுநலம் அடங்கி உள்ளது!
புத்தனின் சுய நலம்
ஆசை கொள்ளாதிருப்பது!
காந்தியின் சுய நலம்
சுதந்திரத்தை பெற்று தந்தது!
நாமும் தனித்துவம் வாய்ந்த
நல்ல சுயநலங்களை பேணுவோம்!
நாமும் வாழ்வோம் பிறரையும்
வாழ வைப்போம்!