மறக்கவியலா போதுகள்.1. 33

மறக்கவியலா போது..1
மரணத்தின் வாசலுக்கு நான்
மனமாற ஓடினேன்.
புலிக்கு முன்னால் ஓடிய மானும்,
பெண்ணுக்கு பின்னால் ஓடிய ஆணும்
உருபட்டதாக வரலாறு இல்லை
என்று எகதாளம்
பேசிய நானே
மரணத்தின் வாசலுக்கு
மனமாற ஓடினேன்.
இருபதாவது வமதில் இருந்த நான்
சிநேகிதனோடு
சினிமா போக
அந்த பாதையே அவசரமாக போனேன்.
இடையில் குறுக்கிட்டது
இருப்புப் பாதை.
தண்டவாளத்தின் மேல்
தாவணியில் ஒருபெண்.
உட்கார்ந்திருந்ததை நன்பன்
உற்றுப் பார்த்தான். அவன்
பார்ப்பதை அறிந்த. அந்த
பருவப்பெண் எழுந்து
ஓடத்தொடங்கினாள். ரூபா
ஓடுடா. ஓடு என்று
கத்தத்தொடங்கினான் நன்பன்.
ஏதும் புறியவில்லை. ஒரு
ஏதும் தெரியவில்லை.
ஆயிரம் மீட்டர் அருகிலேயே
ஆதிசேசனைப் போல் மின்தொடர்வண்டி.
கோழிக்குஞ்சைப் போல் அவளும்,
காட்டுப்பூனைப்போல் நானும்
ஓடினோம்.
முன்பின் அறியா
பெண்பின் நான்.
ஆயிரம் நாக்கொண்ட ஆதிசேசன்
என்முன்.
ஓடினாள், ஓடினாள் வாழ்வின்
முடிவுக்கு போகும்
முடிவோடு ஓடினாள்.அவள்
ஓட்டத்தை நிறுத்த
வாட்டத்தைப் போக்க
நான் ஓடினேன்.
இருநூறே மிட்டர்
தூரமிருக்கும்
எனக்கும்
இரயிலுக்கும்,
இடையிலிருக்கும்
அவளுக்கும்.
ஓடிய பெண் உறுதியாக
உட்கார்ந்துவிட்டாள் இறுதியாக.
தொடர்சி 2 ல்