மறக்கவியலா போதுகள்.2. 34

மறக்கவியலா போது..2


அள்ளி அவளை தூக்கிபடி
துள்ளி விலகினேன் சில அடி.
வினாடியை வெட்டினால்
அதில்பாதிதானிருக்கும்
அளவு நேரம்.

ஏறி மிதித்து துவைத்து
உலர்த்த வந்த இரயில்
ஏமாந்து என்னை
கடந்து ஓடியது.

காந்தம் போல் என்னை
காற்று இழுக்கும் அண்மை.
பேயைப்போல் மோத வந்ததது
நாயைப்போல நகர்ந்தது. என்

காலடியில் அப்பெண் தலை
கவிழ்ந்தமரந்திருந்தாள்.
காவலாய் அவள் எழாதவாறு
கைக்கிடையில்
வைத்திருந்தேன்.

தட தட வென ஓடும்
இரயிலின் ஓசை
தடால் தடால் என அடிக்குமென்
இதய ஒலிக்கு தோற்றது.

அறுபது வினாடிக்குள்
அத்தனையும் முடிந்தது.
கூட்டமும் கூடியது.
காலமும் ஓடியதால்
விடைகாணாமலேயே நாங்கள்
விடைபெற்றோம்.

மின்தொடர் வண்டியைப்போல்
என்தொடர்கதையும் நீண்டுவிட்டது.

ரசிப்போர் ரசிக்கட்டும். முகம்
சுளிப்போர் சுளிக்கட்டும்.
அனுவளவும் பொய்யில்லை.
அக்மார்க் உண்மையிது.

ஜோசப் கிரிகரி ரூபன்.
19.03.1986

எழுதியவர் : ஜே.ஜி.ரூபன். (16-Mar-13, 1:25 pm)
சேர்த்தது : ரூபன் ஜோ கி
பார்வை : 179

மேலே