உணர்வின் உயிரில் கலந்த நம் நட்பு 555

தோழியே...

நான் கடல் கடக்கும்
என் பயணம்...

உன்னை காணமுடியாமல்
தவிழ்தேன் நான்...

பயணத்தின் முடிவில்
உன்னை தொடர்பு கொண்டேன்...

கைபேசியில் கேட்கிறாய்
ஆயிரம் மன்னிப்புகள்...

தோழியே...

இனியும் கேட்காதே
என்னிடம் மன்னிப்பு...

என் உயிரில்
கலந்த உறவு நீ...

உயிரில் கலந்த உறவாக
நீ வரவில்லை...

என் உணரவில கலந்து
உயிரையும் கொடுக்கும் உறவு...

நம் நட்பு...

தூய்மை கண்ட
நம் நட்புக்கு...

இனியும் வேண்டாம்
மன்னிப்பு...

மரணத்தை நாம்
முத்தமிடும் வரை.....

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (16-Mar-13, 3:50 pm)
பார்வை : 310

மேலே