உனக்காக எதுவும் செய்ய....
அன்புத் தோழியே..
கனிந்த உன் முகம்
கன்றி சிவந்தது ஏன்?
அன்பை மட்டுமே அறிந்த
உன் மனதை
யாராவது கடும் வார்த்தை எனும்
அம்பால்
காயப்படுத்தி விட்டார்களா?
எப்போதும் அன்புக் கதை
பேசும் உன் விழிகள்
இப்போது ஏன்
கண்ணீர் மழையில்
குடை இல்லாமல் நிற்கிறது?
எவரேனும் உன்னை
காயப்படுத்தினால்
சொல்லிவிடு......
உயிர் கொடுக்கும் தோழன்
ஒருவன் இருக்கிறான் என்று....
நான் இருக்கிறேன் உனக்கு ..
பனியிலும் மழையிலும்
கோடை வெயிலிலும்
எந்த நேரத்திலும்
உனக்காக எதுவும் செய்யத்
தயார் நிலையில்....