காத்திருப்பேன் கல்லறையே!

டேய............டேய்...............
என்னைப்
பரிதவிக்கவிட்ட பாவி நீ!
நண்பனாடா...................நீ!

ஏனிந்தச் சுயநலம்.............
எப்படி..............எப்படியடா?
உன்னால் முடிகிறது........?
ஒரு நாள் பிரிவின் வலியே
உனக்கு இப்படியென்றால்...
காலமெல்லாம் பிரிவைத்
தாங்கிட நான் மட்டும்
கல் நெஞ்சக்காரனோடா?

நானோ உன்னிடம் சொல்லித்தான்
போனேன்........நீயோ சொல்லாமலே
போய் விட்டாயடா.............................

என்னையுமுன்னையும் பிரித்திட
இயற்கையும் வெல்லுமோ ! எனத்தான்
சொன்னாயடா.......................................!

இன்று அந்த இரக்கமில்லா
இயற்கைதானே வென்றதடா...............!

தினமுமென்னைத் தேடிவந்து
அழைப்பாயடா காற்றுவாங்க

.இன்று
அந்தக் காற்றையும் மறந்தாயோ!
என்னையும் மறந்தாயோ!
ஆலமரம் மறந்தாயோ!
ஆற்றுமணல் மறந்தாயோ!

ஏரிக்கரை மறந்தாயோ!
தேரிமேடும் மறந்தாயோ!
உறவுகள் மறந்தாயோ!
உற்ற துணை மறந்தாயா!
எல்லாமே மறந்தாயோ!
இடுகாடே நினைந்தாயோ!

காற்றோடு கலந்த உன்
கல்லறையே துணையடா...........!
காத்திருப்பேன் அங்கேதான்......
காலனை அனுப்பி வை!

எழுதியவர் : கவிஞர்.கொ.பிச்சையா.. (16-Mar-13, 9:12 am)
சேர்த்தது : கொ.பெ.பி.அய்யா.
பார்வை : 214

மேலே