எது கவிதை

வார்த்தைகளில் விளையாடி
எதுகை முனை பேசி
போற்றி தூற்றி
துதித்து மதித்து
சுருக்கி விவரித்து
பொய்யை புகழ்ந்து
காதலால் கசிந்து
காதலியால் நசிந்து
புறச்செயல்பாட்டல் பொங்கி
எழுதுவதா கவிதை
என் குழந்தையின் சிரிப்பை பார்
கவிதை எதுவென்று புரியும்

எழுதியவர் : ஆ.சுதா (16-Mar-13, 2:41 pm)
Tanglish : ethu kavithai
பார்வை : 131

மேலே