பிரபஞ்சம்

எரிதலில் ஒன்றும்
நனைதலில் ஒன்றும்
திரிதலில் ஒன்றும்
தாங்குதலில் ஒன்றும்
வானமாய் ஒன்றும்
கோடிட்ட இடத்தை
நிரப்பிக் கொண்டு செல்லும்
ஒரு
ஒற்றை சொல்லில்
அடங்க மறுக்கிறது ...

ஒன்றோடு ஒன்று
சேரும்
மற்றொன்றாய்
அது
கோடிட ஆரம்பிக்க
ஒன்று நேரிடலாம்
அது
ஒவ்வொன்றாய்
சொல்லும் ஒன்றில்
நிரம்பிக் கொண்டே
செல்கிறது ஒரு வெற்றிடம்....

அது போட்டிருக்கும்
முகமூடிக்குள்
மெல்ல சிரிக்கலாம்
இந்த பிரபஞ்சம்
அல்லது
இன்னொரு பிரபஞ்சம்....

எழுதியவர் : கவிஜி (16-Mar-13, 2:21 pm)
பார்வை : 97

மேலே