காலமெல்லாம் காத்திருப்பேன்...
விதையை துளைத்து முளைக்கும் விருட்சமாய்
விழிகளில் விழுந்து இதயத்தில் வளர்ந்தாயே..
உன்னை வெட்டி எறியவும் மனமில்லை
நீர் ஊற்றி வளர்க்கவும் மனமில்லை
நீ இல்லாதபோது உன்னை காணத்துடிக்கும் என் கண்கள்
ஏனோ மறுக்கிறது
நீ அருகில் இருந்தும் உன்னை காண்பதற்கு...
உதடுகள் பேசத்துடிக்கும்,உள்ளத்தில் தைரியமில்லை
உன் முகம் பார்த்து பேச....
கனவுகள் மட்டுமே என் ஊடகம்
உன்னை காணவும்,கண் பார்த்து பேசவும்
இருப்பினும் காத்திருப்பேன் காலமெல்லாம்
ஒருநாள் நிச்சயம் என் கைபிடிப்பாய்
என்ற நம்பிக்கையில்.....

