உன்னாலே உன்னாலே
பூமி கூட சுத்துறேன்
பூவை பார்த்து முறைக்குறேன்
பூச போட கேட்குறேன்
பூரிப்பான உன் சிரிப்பாலே
தேடி போனது கிடைக்கல
தேக்கு மரத்தை தூக்குறேன்
தீ கூட மோதுறேன்
தித்திக்கும் உன் உதட்டால
காக்கை கிட்ட பேசினேன்
கடல போய் கத்துறேன்
காவிய பார்த்து துறத்தினேன்
கரைங்கிய உன் கண்ணால
நொண்டி ஆட்டம் பிடிக்கல
நொந்து போக நடக்குறேன்
நெஞ்ச போட்டு திட்டுறேன்
நெருங்கி உன்னோடு நடக்கையில
உள்ளம் கூட சொல்லுதே
உன்னோடு இருக்க கேட்குதே
ஊமையான என் பேச்சுதான்
உன்கிட்ட பேச பார்க்குதே
என்ன மீறி எண்ணுதே
எண்ணம் எல்லாம் உன்னதே
ஏக்கம் வந்து சுழ்ந்ததே
எட்டி பார்த்த திட்டுற
ஏன்டி என்ன கொல்லுற
வேடிக்கை பார்க்க போனனே
வேலிய பிடுங்கி எறிஞ்சனே
வீம்பு காட்டிய உன்கிட்ட
வீரம் காட்ட விரைந்தனே
சண்ட பிடிக்க போனனே
சண்ட போட்ட உன்கிட்ட
சம்மதம் பேசி வந்தனே
சாகும் வர உன்னோடு இருக்க

