சாகும்வரை சுமப்பேன்.

பச்ச வயலெங்கும்
பார்வைகள் மேய்கிறது
உச்சி வெயில் வந்து
உன்னினைவை தைக்கிறது
அச்சடித்த கடதாசி
அழிந்திடலாம் மாமா
மச்சம் போல் மனசில்
மாட்டிப்புட்டேன் ஆமா
வெத்தல போட்டதுபோல்
வெந்தது ஏன் நெஞ்சும்
சத்தியமா ஒன்ன நான்
சாகும்வரை சுமப்பேன்.