நிலவின் சுவடுகள்

நிலவின் சுவடுகள்
பதிந்த நெஞ்சினில்
உன் நினைவுகளைச்
சுமந்து நடக்கிறேன்
அலைகள் தழுவும்
மணல் வெளியில்
உன்னுடன் கைகோர்த்து
நடந்த
மாலைப் பொழுதுகளை
சுவாசிக்கிறேன்
நீ மறந்துவிட்ட
பொழுதுகளை
நினைவு படுத்தும்
மாலையின் முன்
கண்ணீருடன்
நிற்கிறேன்
~~~கல்பனா பாரதி~~~