அம்மா தந்த பரிசு...!

பள்ளி சென்ற பருவம் அன்று...!
பாடநூல்கள் எத்தனையோ முகமுன் இருந்தது...!
சிறந்ததாய் ஏனோ கவிநூல்கலே கண்முன் தெரிந்தது...!
என்உள் பிறந்த திறமையும் ஏனோ அதனையே உயிராய் ஏங்கியது...!

விதைத்தேன் மனதினை
அழகிய தமிழ்ச்சிற்பக் கலையினில்...!
இணைத்தேன் அதனினை
என்வாழ்வின் முதல் கவிதை போட்டியினில்...!
கிடைத்தது அதினில்
பரிசு, பதக்கம், பாராட்டுகள்...!

காண்பித்தேன் ஓடிவந்து
அம்மாவிடம்...!
உரைத்தார்கள் செவிவழியே என் மனதிடம்
”வேண்டாம் இந்த வேலை...
கரம் ஈட்டும் பாடசாலை
பின் வாழ ஒரு வேளை”...!

மாற்ற நினைத்தேன் என் மனதினை...!
ஏனோ மனது
கற்றுக் கொடுத்தது எனக்கு...
அம்மாவை ஏமாற்றும் வித்தைகளை...!

போட்டிகள் பல இணைந்து கொண்டேன்...!
ஈட்டிய ஏனை பரிசினை
அம்மாவின் விழியினின்று
ஒழித்துக் கொண்டேன்...!

இரகசிய தோழன் அவன்
எனை பள்ளி அறுந்து கல்லூரியிலும்
அணைத்துக் கொண்டான்...!

இணைந்தேன்...
கல்லூரி வாழ்வினில்
முதல் கவிதைப் போட்டியினில்...!

போட்டியின் முதல் நாள்...
நடந்தது எனக்குள் பல ஒத்திகைகள்...
தீர்ந்தது பழைய ஏட்டின் தாள்கள்...

மறுதினம் போட்டியில்...
கிடைத்தது ஏனோ தோல்வி...!
ஆறுதல் கரத்தில்
மனதினை ஏந்தி...
திரும்பினேன் வீட்டிற்கு...

என் அறைக்குள் அம்மா...!
அமர்ந்திருந்தார்... அமைதியுடன்...
வாசித்துக் கொண்டு...
முதல் நாள் ஒத்திகைத் தாளில்
அடித்துத் திருத்தி எழுதியிருந்த கவிதைகளை...!
தலைப்போ ”உன் திறமைக்குத் தாய் தந்தையரின் கரம்”...!

நெருங்கினேன் அம்மாவை...
என்னைப் பார்த்த அவள் விழிகள்...
”உணர்ந்தேன் உன் திறமை இன்று”...! என்றுரைத்து
அத்தனை பருவம் மண்ணுள் மறைத்த
விதையாயிருந்த
என் கவிதைக்கு...
கார்முகில் விதைக்கு மழைத்துளித் தருவதாய்...
கருவிழிகளின் கண்ணீர்த்துளிகளைப்
பரிசாய்த் தந்தாள்...!

கட்டி அணைத்தேன்...என் தாயுடன்...
ஒத்திகைத் தாளினையும்...!

சுற்றவர் பரிசு மறுத்த அந்த கவிதைக்கு...
பெற்றவள் பரிசாயளித்த
அவள் விழியின் வெள்ளி முத்துக்கள்...
எட்டிப் பார்க்க வைத்தது
தைரியமாய் மீண்டும் இந்த உலகினை...!
பரிசுப் பூக்கள் மலரும்
செடியாய் எந்தன் விதையினை...!
என்றும் மனது மறக்காது
என் தாய் தந்த பரிசினை....!

எழுதியவர் : மு.ஜீவராஜ் (19-Mar-13, 2:26 pm)
பார்வை : 168

மேலே