காணல் நீர்

வாழ்கையில் தூரலும் மழையும் மட்டுமே

விளையாடிய எனக்கு,

திடீரென வந்து விழுந்தது ஒரு இடி!

நல்லதொரு கவிதையாக இருந்த என் வாழ்வில்

எழுத்துப் பிழையென விளையாடி,

சதி செய்தது விதி..

கண்ணெதிரே தெரிந்த இன்பம் வெறும்

காணல் நீராய்க் காணாமல் போக,

பேனாவின் மையாக மாறியது

என் கண்ணீர் மட்டுமல்ல..என் உயிரும் தான்...

எழுதும் எழுத்தோடு கரைந்தது என் உயிரும்..

மரணத்தையும் முத்தமிடத் துணிந்தேன்

எனினும்,மனம் வரவில்லை...

உனக்கென கொடுத்த என் உயிரை,

திரும்பப் பெற்றுக்கொள்ள இயலவில்லை..

நீயும் என் உயிரோடு கலந்துவிட்டாய்..

என்னுள்ளே உயிராய் வாழ்கிறாய்...

இன்று,கண்ணீரும் செந்நீரானது...

எழுதியவர் : Indra (22-Nov-10, 10:43 pm)
சேர்த்தது : indra
Tanglish : kkanal neer
பார்வை : 709

மேலே