(7) தந்திர காட்டில் நான் (2) விதைக்காத விதையில் விளைந்த மரம் நான்

***********(தொடர்ச்சி )****************
***************************************************************
(2) விதைக்காத விதையில் விளைந்த மரம் நான்

அன்பே
வானக் கதிர்கள்
வண்ணக் கதிர்களாய்
வனத்தை அணைக்கிறதே
இது புதிரா ?

இலையின் பனித்துளிகள் -கதிரொளியால்
இசைந்துருகி வேரில் விழுந்து
மீண்டும் புது இலையாய்
ஜனிக்கிறதே -இது புதிரா ?

துர்நாற்றம் தரும்
எச்சங்கள் கூட
எங்களுள் கலந்தால்
மாற்றம் பெரும்
மனம்பரப்பும் மலர்களாய்
மாறும் -அன்பே இது புதிரா ?

ஆயிரம் பறவைகள்
ஆனந்தமாய் சுந்தர
காட்டை நிறைத்து
சுதந்திர காற்றை
சுவைக்கிறதே இது
புதிரா ?

அடித்தாலும் அமைதி காப்போம்
அணைத்தாலும் அமைதி காப்போம்
அறுத்தாலும் அமைதி காப்போம்
அன்புதான் எங்கள் மொழி
அன்புதான் எங்கள் நிலை
அன்புதான் எங்கள் உயிர் -என்
மொழி உன் செவி வழி உள்ளத்தை
தொட்டதில் எதேனும் உண்டா
புதிர் !!!!!!!!!!!!!
***********(தொடரும்)******************

எழுதியவர் : கார்த்திக் (திருநெல்வலி ) (21-Mar-13, 2:46 pm)
பார்வை : 112

மேலே