ஒரு போராளியின் கதை

உண்மைகள் வாய்பொத்தி மௌனித்திக்கிடந்த தருணம்
பாதைகள் கூட சிலநேரங்களில் பயணிப்பவர்களுக்கு பரலோக திசை காட்டின,
எனக்கும் என் நண்பனுக்கும் எங்களுடன் பயணித்த அந்த சிவப்புக்கொடி போர்த்திய உயிரற்ற உடலுக்கும் பயம் மறந்து போய் பல நாட்கள், உயிர் இருக்கும் வரைதானே
இந்த உடலுக்கு மதிப்பு?
அவன் பற்றிய நினைவுகள் கண்முன் ஒவ்வொன்றாய் வந்தன, முதன்முதலாக அவன் என்னிடம் பேசிய வார்த்தைகள்
"உங்களுக்கு செஸ் விளையாட தெரியுமா? தெரியாட்டி கூட பரவாயில்ல நான் சொல்லி தர்ரன்"
ஏதோ எந்தவித எதிர்பார்ப்புக்களும் இல்லாமல் தொடர்ந்தது எங்கள் நட்பு
அடிக்கடி அவன் தன் குடும்பத்தை பற்றி பேசிக்கொண்டிருப்பான்,எனக்கு அவன் பேச்சு மிகப்பிடிக்கும்,இடைப்பேச்சு ஏதுமின்றி கேட்டுகொண்டிருப்பேன்
மிகவும் மென்மையான அவன் சுபாவம் யாரையும் அவன் பக்கம் இழுக்கும், அவனது எழுத்துக்கள் அச்சடித்தது போல அவ்வளவு அழகாய் இருக்கும
அவன் அந்த நாட்களில் அதிகமாய் சிரித்து நான் பார்த்தது இல்லை
>>>>>

வேலி கிடுகுகளால் அழகாக மறைத்து அடைக்கபட்டிருந்தது, தகரத்தால் செய்யப்பட்ட அந்த கதவினை திறக்கின்றேன்
அந்த கறுத்த நாய் குரைக்க தொடங்கியது, அது நான் சொல்லப்போகும் செய்தியை முற்கூட்டியே அறிந்திருக்கும்!
அங்கிருந்த பெரிய மனிதர்கள் எல்லோரும் எழுந்து வருகின்றனர், அவன் தந்தை நிச்சயமாக அந்த உயர்ந்த மனிதராகத்தான் இருக்கும்,
அவன் அப்பாவின் சாயல், அந்த சின்னப்பெண் அவள் தான் அவன் தங்கை, அவன் அடிக்கடி இவளின் குறும்புகளை பற்றி பேசுவான்
அவளின் முகம் அப்படி வாடிப்போய் இருக்கின்றதே!
எல்லோர் முகங்களும் என்னை முறைத்தன அவன் தங்கையைத்தவிர அவளுக்கு நான் அவளின் அண்ணன் போல் தெரிந்திருப்பேன்,கட்டாயம் சொல்லத்தான் வேண்டுமா?
"என்ன தம்பி என்ன விசயமா வந்தனிங்கள் தம்பி எங்க?" அம்மா... அது வந்து.... நேத்து மணலாறில நடந்த.......
சொல்லமுடியாமல் நா வரண்டது, அவன் தாய் என் நெஞ்சில் அடித்து அழுதாள், "எண்ட பிள்ளையை கொண்ட்டிடியலடா பாவிகள்.....
சற்று முன் அமைதியாய் இருந்த அந்த வீடு சத்தத்தால் நிரம்பியது, அவர்கள் வார்த்தைகள் ஒவ்வொன்றும் இடியென இறங்கியது,
அவர்கள் முன் மண்டியிட்டு விழுந்தேன், அழுதேன், முதன்முதலாய் இன்னொருவனுக்காக என் கண்ணீரும் கரைந்தது,
நெஞ்சு வலித்ததோ இல்லையோ மனசு வலித்தது
என்னால் எப்படி ஒரு உயிரை கொல்லமுடியும்?
தொடரும்....!

எழுதியவர் : ரஞ்சித் esp (21-Mar-13, 6:28 pm)
பார்வை : 302

மேலே