அதிகாலைப்பொழுது

பகலவன் பட்டொளி
பொன்னிற பந்தாய் குளந்தனில்
பசுமை புல்நுனியில்
ஆயுள் கால நீடிப்பாய்
அச்சமோடு விற்றிருக்கும் பனி .
ஆழ்ந்து உறங்கும் புட்கள்
ஆரவாரமாய் கண்விழிப்பு .
இதழ் விரி மலரை
இன்பத்துடன் நாடும் வண்டு .
தூக்கத்திற்கு துக்கமாய்
அதிகாலை செவிபாயும்
ஆலயமணி .
இடைவளைந்து இல்ல முற்றத்தில்
கோலமிடும் மங்கை .
இன்பச்சிரிப்போடு
முதுகில் பாரமேந்தி
பயிலகம் செல்லும் குழந்தை .
இருளில் மின்னிய
தெரு ஓரவிளக்குகள்
அணைக்க ஆளின்றி
மங்கிய நிலையில் .
உணவளிக்கும் உயரிய பணிக்காய்
உடலாடையின்றி
ஏர்கலப்பை ஏந்தி
வீரநடை பயிலும்
உழவன் .
குடிசை மீதேறி
பெட்டைக்கு குரலெழுப்பும்
சேவல் .
அலுவலகப் பணியால்
அயர்ந்துறங்கும் தந்தையை
தட்டியெலுப்பும் குழவி .
இப்பகல் இன்பப்பகலாய்
புலரதென
பொத்திய போர்வையை விலக்கி
வீதியை விழித்துப்பார்க்கும்
வீதிப் பிச்சைக்காரன் .
இளையகவி