காதல் படிப்பு!!!!!
பருவம் வந்தனைவரும்
பார்வையில் பிடித்து
மனவானில் பறவையாக பறந்து
படிக்கும் பாடம்!!!
ஊமையாக சிலர் படிக்க
ஆமை நடையாக சிலர் படிக்க
அண்ணத்தின் நடையாக பலர் படிக்க
கண்ணம் வீங்கியும் படிப்பர் பலர்!!!
ஒரே கல்லூரியில் படிப்பர் சிலர்
பல கல்லூரியில் படிப்போரு யிங்குண்டு
மோகத்தில் பலர் படிப்பு
ஆசை தாகத்தில் சிலர் படிப்பு!!!
அழகும் அறிவம் அடித்தளமல்ல
பழகும் பண்பும் கனிந்த பார்வையும்
வீரமும் சாதும் சாதித்தது யிங்கே
சாதியும் மதமும் சண்டையிட்டு தோற்பதுண்டு!!!
பருவத்தில் படித்து தோற்றதை
மறுபடியும் நினைத்து நினைத்து
படித்து படித்து பார்ப்பவருக்கு
மனம் தரும் முதுகலைப்பட்டம்!!!
வெற்றி பெற்றோர்
வாங்கும் பட்டம் தோல்வி
தோல்வி அடைந்தோரே
வெற்றியாளன் இங்கே!!!
நன்றி
”வாழ்க வளமுடன்”
ராசி