எது இல்லை?

எது இல்லை?
என்றே பார்க்கிறேன்
எனக்கு!

நல்லதோர்
மனதினைத் தவிர
எல்லாமே
இருக்கிறதே...

தொலைத்ததை விட
பெற்றதே
அதிகம்.

இன்னும்
ஏன் மயக்கம்
என்றே பார்க்கிறேன்.
கேவலம் ஒப்பீடு!

என்னால் எவரையாவது
துன்புறுத்தாமல்
இருந்திருக்க முடிகிறதா?

இல்லையே!

உணர்வுகள் என்றே
பறைசாற்றி
வாழ்வினை நரகமாக்கும்
உணர்வுகளினுள்
அடிமையாகி,

பிறரை
அடிமைப்படுதிட
என்னும்
எண்ணம் தான்!

இந்த வாழ்வின்
உச்சமாய்
எனக்கு .......

எது இல்லை
எனக்கு
வாழ்விக்கும்
எண்ணங்கள்
மட்டுமே...

எழுதியவர் : சசிதரன் (24-Nov-10, 6:35 am)
சேர்த்தது : sasidaran
பார்வை : 486

மேலே