வறட்சி

கொள்ளுப் பாட்டி - ஒத்த
எள்ளு வடைத் தட்டி
எண்ணையிலே போடா
விட்டாலோ? (நிலா)

அரை வயிறு, கால் வயிறு
அப்படியே போனவன்தான்
அத பிச்சி அனுதினமும்
திம்பானோ?

காடெல்லாம் காஞ்சிடுச்சி
எலிக் கூட்டம் ஓஞ்சிடுச்சி
பூனையோட தீனியையும்
தின்னாச்சி

துப்புக் கெட்ட வானத்த
துப்பவும்தான் முடியலையே
தொண்டைக் கொழியிலும் தண்ணி
வத்திப்போச்சி

எழுதியவர் : (24-Mar-13, 9:41 pm)
பார்வை : 131

சிறந்த கவிதைகள்

மேலே