கண்ணீரில் இழக்கமாட்டேன் உன்னை...

கண்கள் குளமானாலும் .....

கரை கடப்பதில்லை
என் கண்ணீர்..

கன்னம் தொடுவதில்லை
என் கண்ணீர்...

கரித்ததும் இல்லை
என் கண்ணீர்....

சேராத காதலுக்கு
சிந்தாமல்
என் கண்ணீர் ....!

மாறாத காதலுக்கு
சின்னமாய்
என் கண்ணீர்.....!!

கண்களின் ஓரம்
கசிந்தது
சில முறை
என் கண்ணீர்....!

கசக்காத உன் நினைவில்
கண் இமை குடித்தது
பல முறை
என் கண்ணீர்.....!!

உந்தன் நினைவில்
கசிந்த துளி நீரும் இதமே..
சிந்தாத கண்ணீரில்
உன் நினைவை
சுமப்பதும் சுகமே...

என் காதலும் நீயே
என் கண்ணீரும் நீயே
காதலில் இழந்துவிட்டேன் உன்னை
கண்ணீரில் இழக்க மாட்டேன் உன்னை

எழுதியவர் : கன்னியம்மாள் (25-Mar-13, 12:13 am)
பார்வை : 207

மேலே