Mouna Raagam
வாய்மொழி எங்களுக்கு அரிது அரிது!
விழிமொழி தான் இங்கு இனிது இனிது!
இசைகேட்டிட ஓசை அறியோம்
காற்றலைகளில் இன்பம் நுகர்ந்தோம்
வார்த்தை சிந்திவிட வாய் இல்லையே
சத்தம் ஏந்திக்கொள்ள செவி இல்லையே!
இன்பம் அதற்கு இது தடை இல்லையே!
துன்பம் அதற்கு இது வேர் இல்லையே!
எங்கள் மொழி கற்றுவிட்டால்
உங்கள் மொழி துச்சம் ஆகும்
எங்கள் வார்த்தைக்கு வடிவம் இல்லை
எம்மொழியிலும் இவ்வார்த்தை இல்லை! இல்லை!
அமைதியை ஒரு போர் தொடுப்போம்
அறத்திற்கே அதன் வேர் கொடுப்போம்!!