வரத்திற்க்கு எதிர்பதம் சாபமன்றோ ??
உயிரே!
உனக்கு இணையாய் துணையாய்
நிஜத்தில் ஆகிடத்தான் முடியதுபோனாலும்
நிலைபாட்டிலேனும் ஒன்றாகத்தான்
சந்தோஷத்தை சந்தோஷமாய்
களவுகொடுக்கின்றேன் கனவே காணாது .
நீண்டிடும் நின் நினைவுகளை விட்டு
அகண்டால் தானே, உறக்கம் கொண்டிட ,
உறங்கினால்தானே, இனிகனவை கண்டிட
உறக்கமே எனக்கு பகல்கனவாய் ஆனபின்
இனி கனவும் எனக்கொரு சாபக்கேடே ...
வரிசையாக,ஒன்றன்பின் ஒன்றாய்
உறக்கமின்மை,சாபக்கேடென
வார்த்தைகளின் அலங்கரிப்பால் ஏதோ
சோககீதம் பாடுவதற்க்கு சுரம்பிடிப்பதாய்
கருதிட வேண்டாம் !
நீங்காது நிலைத்திருக்கும் நின் நினைவே
தவமின்றி நான் பெற்ற அரும்வரம் ஆனதால் ,
வரத்திற்க்கு எதிர்பதம் சாபமன்றோ ??