அன்பே உன்னால்

பார்த்த அந்த கண்களை என்னால்....
பாசம் வைத்த அந்த இதயத்தை என்னால்....
வருடிவிட்ட அந்த விரல்களை என்னால்.....
மௌனம் புரியவைத்த அந்த உதடுகளை என்னால்....
நளினம் பயிற்றிய அந்த விழிகளை என்னால்....
நாணம் காட்டிய அந்த பாதங்களை என்னால்....

கண்ணால் காணோனா உன் அன்பினை என்னால்....
இதயத்தில் குடி கொண்ட உன் காதலை என்னால்....
விரல் கொண்டு எழுதிய கவிதைகளை என்னால்...
உதடு கொண்டு ஆட்கொண்ட உன் வார்த்தைகளை என்னால்....
பயணம் செய்த நாட்களை என்னால்....
முடிவிலா அகிலத்தில் முடிவான நம் காதலை என்னால்....
மீட்க மட்டும் முடிகிறதே அன்பே என்னால்....
நீ என் காதலை நீங்கி செல்வதால்... அன்பே என் வினா அது எதனால்??

எழுதியவர் : த.சேகரன் (26-Mar-13, 2:50 pm)
சேர்த்தது : த சேகரன் Trinco
Tanglish : annpae unnaal
பார்வை : 85

மேலே