தமிழே தாயே வாழியவே
தமிழே தாயே எங்கள் உயிரே வாழியவே
தமிழே மொழியே எங்கள் உயர்வே வாழியவே
தமிழே அன்பே எங்கள் அமுதமே வாழியவே
தமிழே அறிவே எங்கள் ஆற்றலே வாழியவே
தமிழே சிறப்பே எங்கள் செம்மொழியே வாழியவே
தமிழே ஓசையே தித்திக்கும் தேசுவையே வாழியவே
தமிழே இசையே இன்பகவியமுதே வாழியவே
தமிழே எழுத்தே ஒங்காபுகழ் ஓவியமே வாழியவே
தமிழே சொல்வளமே வான்மழையே வாழியவே
தமிழே சொத்தே இலக்கிய சோலையே வாழியவே
தமிழே பழமையே பரமனின் முதற்சொல்லே வாழியவே
தமிழே தொன்மையே கல்வெட்டு சிற்பமே வாழியவே
தமிழே தாய்மையே புதுமொழிகளின் வாழ்வே வாழியவே
தமிழே வரலாறே ஆழ்கடலின் அதிசயமே வாழியவே
தமிழே அழகு என்றும் கன்னித்தமிழே வாழியவே
தமிழே பெருமையே வள்ளுவன் குறளே வாழியவே
தமிழே ஆச்சரியமே சங்க இலக்கியமே வாழியவே
தமிழே இன்பமே கம்பனின் கவியே வாழியவே
தமிழே கனிவே கண்ணகியின் துணிவே வாழியவே
தமிழே ஒழுக்கமே சிலம்பின் விளக்கமே வாழியவே
தமிழே குடியாச்சி மூவேந்தரின் முடியாச்சி வாழியவே
தமிழே தெய்வீகமே பக்தி இலக்கியமே வாழியவே
தமிழே மாண்பே சித்தர்களின் மருத்துவமே வாழியவே
தமிழே புதுமையே நவீன இலக்கியமே வாழியவே
தமிழே எழுச்சியே இணைய உலகின் புரட்சியே வாழியவே