அந்த மேகம்....

சல்லடையாய் போயிருந்த அந்த மேகம்
வசிகரிக்கும்படி இருந்தது....
வானத்தை இப்புறமும் அப்புறமுமாய் காட்டியது...

மழை விடுத்த வெண்மையாய்
கண்முன்னே காற்றாடியது...

பயணித்துக் கொண்டேயிருந்தது
நிற்கச் சொல்ல மனமுமில்லை...
சொன்னால் நின்றிருக்கும் என்பதிலும் விருப்பமில்லை...

பதித்த பார்வையின் ஓரமாய்
சமுத்திரம் கடந்து
வேகமாய் எங்கோ சென்றது....

எழுதியவர் : அகிலா (27-Mar-13, 11:01 am)
சேர்த்தது : Ahila
பார்வை : 157

மேலே