உதவிடுவோம் நண்பர்களே....

உங்களின் மதிப்பு மிக்க நேரத்திற்குள் ஆக்கிரமிக்கும் உரிமையை எடுத்துக் கொள்கிறேன் நண்பர்களே !

பெரு நகரங்களில் மக்களின் வாழ்க்கைத் தரம் மற்றும் வாழ்வதற்க்கான வாழ்வாதாரங்கள் பற்றிய
சர்வதேச கணக்கெடுப்புக்காக தொண்டு நிறுவனம் ஒன்றோடு இணைந்து பணியாற்றும் வாய்ப்பினை
சில வாரங்களுக்கு முன்னர் நண்பர் ஒருவர் வழியாக கிடைக்கப் பெற்றேன்...
நிறைய மனிதர்கள்,ஏன் இதற்க்கு முன் நானே அறிந்திடாத சென்னையின் கூவம் ஆற்றங்கரையோர
மக்களின் தினசரி வாழ்வை நேரில் பார்க்கும் வாய்ப்பு அது...
இந்த கணம் இதைப் படித்துக் கொண்டிருக்கும் உங்களாலும்,உங்களோடு பகிர்ந்து கொண்டிருக்கும் என்னாலும்
ஒரே ஒரு நாள் அந்த இடங்களில் வாழ்ந்திட முடியுமா என்று தெரியவில்லை எனக்கு.
இரண்டு வீடுகளின் வாசற்ப்படிகளுக்கான இடைவெளி சில செ.மீட்டர்களில் ,ஒற்றையடிப் பாதைகள்தான் அவர்களின் தெருக்கள்.
கல்வி அறிவு என்ற பேச்சுக்கே இடம் இல்லை...அரசாங்கம் தரும் இலவசங்கள்தான் இவர்களின் வாழ்வை நகர்த்த உதவுகிறது...
ஏற்றுக் கொள்ளவே இயலாத இன்னும் நிறைய விஷயங்கள்....
இதை நான் உங்களோடு பகிர்ந்து கொள்ள காரணம் இவர்களின் வாழ்க்கை நிலை மட்டுமல்ல.நமது வாழ்வும்தான்...
ஆம் ,120 கோடிக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட ஒரு தேசம்,அதில் 38 சதவிகிதம் பேர் தினசரி ஒரு வேலை உணவோடு
வாழ்வை நகர்த்திக் கொண்டிருக்கும் நிலையில் ....
மூன்று வேலை உணவோடு(அதுவும் நேரத்திற்கு),உலகையே உள்ளங்கைக்குள் கொண்டுவரும் அறிவியில் கண்டுபிடிப்புகளோடு,வானத்தையும் பூமியையும் அசைத்துப் பார்த்துவிடும் கனவுகளோடு,அதற்க்கான சாத்தியக் கூறுகளோடு,எல்லையில்லா வாய்ப்புகளோடு இன்னும் நிறைய வாய்க்கப் பெற்றவர்களாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம் நண்பர்களே !...
இந்தப் பதிவின் நோக்கம் யாரையும் மாற்றி விட முயற்சிப்பது அல்ல...
இதோ,இதை நான் பதிவிட தட்டச்சு செய்து கொண்டிருக்கும் இந்த கணம் இந்தியாவின் ஒவ்வொரு பேருந்துநிலையத்திலும்,ஒவ்வொரு இரயில் நிலையத்திலும் ஏதோ ஒரு மழலை மாறாத குரல், முகம் தெரியாத யாரோ ஒருவரிடம் தனது உணவிர்க்காகவோ,குடும்ப வருமைக்காகவோ கை ஏந்தி கொண்டிருக்கலாம் ...
யாரோ ஒரு முதியவர் உறங்க இடம் இன்றி நடை பாதையில் இடம் தேடி கொண்டிருக்கலாம்...
எத்தனையோ மனித உயிர்கள் தண்ணீரோடு தனது இரவு உணவை முடித்துக் கொண்டிருக்கலாம் ....
அவற்றைக் கண்டும் காணாதவர்களாய் ஆயிரக் கணக்கானோர் நகர்ந்து கொண்டிருக்கலாம்...
இந்த கணம் நான் உங்களிடம் வேண்டிக் கொள்வது இவற்றை எல்லாம் முற்றிலும் மாற்றி விட வேண்டும் என்றல்ல ,
முடிந்தவரை பசியெனச் சொல்லும் ஒருவருக்கு நம்மால் முடிந்ததை செய்துச் செல்வோமே என்றுதான் ....
படிக்க விருப்பம் இருந்தும் வசதியில்லாத குழந்தைக்கு ஒரு காகித பென்சில் கொடுத்து உதவலாமே என்றுதான்...
நம்மிடம் பெரிதாய் செய்வதற்க்கு எதுவும் இல்லாமல் போகலாம்,ஆனால் இது போன்ற சின்ன சின்ன உதவிகளை செய்திடலாமே அவர் அவர் பொருளாதார நிலைக்கு ஏற்றவாறு....
முயற்சிப்போம் நண்பர்களே !
இந்த பூமி பிறந்து இருநூறு கோடி ஆண்டுகள் இருக்கும் என்றால் ,இதில் முதல் உயிர் முளைத்தது மூன்றரைக் கோடி ஆண்டுகளுக்கு முன்புதானாம் .குரங்கிலிருந்து மனிதன் குதித்தது 35 லட்சம் ஆண்டுகளுக்கு முன்புதான்.இன்று 800 கோடியில் இருக்கிறோம்...
எதுவும் ஒரே நாளில் நடந்து விடுவதில்லை நண்பர்களே....
சிறு சிறு துளிகள்தான் மாபெரும் சமுத்திரமாகிறது....
நம் சிறு சிறு உதவிகளும் ,அதற்க்கான முயற்சிகளும் ஒரு ஆரோக்கியமான,வளமான எதிர் காலத்தை ஏற்படுத்தும் என தீர்க்கமாய் நம்புகிறேன் நண்பர்களே !! ...
யாரும் எதிர்பார்த்திடாத தருணமொன்றில் முடிந்துபோகக்கூடும் இந்த வாழ்க்கை...
முடிந்த வரை முயற்சிப்போம் முடியாத ஒருவனுக்கு முடிந்த உதவிகளை செய்திட....

-நன்றிகளோடு SATHISHKUMAR.M (உங்களில் ஒருவனாய் )...

எழுதியவர் : சதிஷ்குமார்.m (28-Mar-13, 12:19 am)
பார்வை : 96

மேலே