அடையாளம் !

உண்ணுவார் மூன்று வேளை.
உறங்குவார் பாதி நாளை.
திண்ணவுந் திரியவும்
தேவையென்பார் மீதி நாளை.
தெருவீதிப் பண்டாரங்கள்
கருமங்களே இதுவென்பார்.

உயிர்வாழ உண்டுறங்கி
உலவுதல் வாழ்ககையோ!
பயனென்ன உலகுக்கு.........
பலனென்ன பிறவிக்கு??
வந்துபோனதே தெரியாதென்றால்
வாழ்ந்ததோ திருட்டுவாழ்க்கை.

உண்ணுங்கள் உழைப்பதற்கு.
உழையுங்கள் உயர்வதற்கு.
உறங்குங்கள் கனவுக்கு.
கனவிற் கண்ட வீட்டையேனும்
கட்டியின்பம் காணுங்கள்
கல்வெட்டும் பதியுங்கள்.

கடன் முடித்தார் அடையாளம்
காலத்தோடு பதிந்திருக்கும்.
காலத்தை வழிநடத்தும்.
காந்திக்கு இராட்டைபோல்
கர்த்தருக்குச் சிலுவையும்.
தியாகத்தின் சின்னங்கள்.

வந்ததின் அடையாளம
வாழ்ந்ததற்கு அடையாளம்.
சந்ததிக்கு அடையாளம
சாட்சிகூறும் அடையாளம்.
ஆக்கமுறச் செய்வதெல்லாம்
அத்தனையும் அடையாளங்கள் .

எழுதியவர் : கவிஞர்.கொ.பெ.பிச்சையா.. (28-Mar-13, 7:24 pm)
பார்வை : 125

மேலே