வாழும் வரை போராடு.......

உயிர்பெற்றாய் உருவமானாய்
உணர்வுபெற்றாய் முழுமையானாய்
மனிதனாய் மலரந்தாய்
போராட்ட வாழ்வு பெற்றாய்...

கருவறையில் போராடியதால்
வென்றுவிட்டாய் இவ்வுலகை
உலகத்துப் போராட்டத்தில்- நீ
அடையவிருப்பது கல்லறையை

மனிதா முன்னும் பின்னும்
திரும்பிப்பார் உன் நிழல்கூட
உன்னை போராடத்தூண்டுகிறது
நீ கண்ணயர்ந்திட்டால்
கனவினிலும் போராடுவாய்

அற்பமுன் வாழ்நாள் - அதில்
போராடிச் சாதித்திருப்பதெதுவோ
இன்று ஒர் போராட்டம்
இன்றியமையாதது - அது
சமூகத்திற்காய் நீ போராடுவது

ஆவேசம் போராட்டமாய் வேண்டாம்
அமைதிவழியில் போராடு
ஹலாலைத் தேர்ந்தெடுத்து
ஹறாம் தவிர்க்கப்போராடு

காம வெறியர்களுக்கு
ஆயுதமெம் பர்தாக்கள்
ஹிஜாப் அற்றோருக்கு - அதனை
அணிவித்திடப் போராடு

கூறுபோடப்படுகிறதெம் நிலங்கள்
அத்துமீறி வைக்கிறார்கள் சிலைகள்
பயந்து நீ ஒதுங்கிடாமல்
நாளைய எம் சந்ததிக்காய் - இன்றே
துணிந்து நின்று போராடு

சமூகத்தால் ஒன்றாயிருந்தும்
பாகுபாடுகளில் எதிரிகளாய்த் திகளும்
எம்மவர்களின் ஒற்றுமைக்கு
இன்று நீ போராடு.......

ஆயுதமற்ற போராட்டமென்று
அகிம்சைவழியில் ஒன்றுபட்டு
அனியாயத்திற்கெதிராகப் போராடு
நிராயுதபாணிகளாய் தளத்தில் நின்று
எம் சமுகத்தின் விடிவுக்காய்ப் போராடு
இப்போராட்டத்தில் சஹீதாகினும்
சாதித்த சுவனவதியாய் மாறி
வென்றவனாவாய் இவ்வுலகையும்

எழுதியவர் : ஹாசிம் (28-Mar-13, 5:45 pm)
சேர்த்தது : ஹாசிம்
பார்வை : 169

மேலே