மறதிக்கு நன்றி

நினைத்தலும் மறத்தலும் நிறைந்த உலகில்
மறதி இல்லாமல் போனால்
மனிதன் நிலை என்ன ?

சாதித்த நினைவுகள் சந்தோசம் கொடுக்கலாம்
சங்கடபடுத்திய நினைவுகள் இருந்தால் ?

அவமானமும் ,வருத்தமும்
ஏமாற்றமும் , மரணமும்
மனிதனின் நினைவில் மறக்காமல் போனால்
வாழ்க்கை தண்டனையாகும்
வாழ்நாள் நரகமாகும்
மனித பிறப்பே சாபமாகும் !

இன்பங்கள் பிறப்பதும்
துன்பங்கள் மறப்பதும் மனிதனுக்கு
இறைவன் கொடுத்த வரம்
காலச்சக்கரத்தில் இயந்திர மெமரிகலையும் தாண்டி
மனிதனின் மண்டையில் குவிந்துகொண்டே கிடக்கு மாபெரும் சுமை !

இரவு மட்டுமே போதாது
பகல் மட்டும் இருந்தாலும் தாங்காது
இயற்கையின் படைப்பில் வருவதும் போவதும்தான் வரம் ,
நல்லதை நினைவில் வைத்துக்கொள்வோம்
கெட்டவைகளை மறப்போம் ,
மறதிக்கு நன்றி சொல்வோம் !

எழுதியவர் : வினாயகமுருகன் (28-Mar-13, 4:49 pm)
சேர்த்தது : VINAYAGAMURUGAN
பார்வை : 134

மேலே