பயணம்
தொப்புள் கொடியினில் தொடங்கிய
குழந்தையின் பயணம்
தொட்டிலில் தொடர்கிறது -தொட்டிலில்
தொடங்கிய மழலையின் பயணம்
கட்டிளமையில் முடிகிறது
கட்டிளமையில் தொடங்கிய
காதலின் பயணம்
கண்ணீரில் முடிகிறது -அக்
காதலின் தோல்வி-அவனை மட்டும்
தேவதாசாய் மாற்றுகிறது
போத்தலில் தொடங்கிய
அவனின் பயணம்
போதையில் தத்துவம் பேசுகிறது
தத்துவம் பேசும் அவனின் வாழ்வும்
போயே சேர்கிறது
ஒரு கைதியின் பயணம்
கம்பிபோலாகி கறல் பிடிக்கிறது
வருவாய் இன்றிய
ஏழையின் பயணம்
உருக்குலைந்தே போகிறது
செவிடனின் பயணம் சீராய்க்கேட்க
யந்திரம் கேட்கிறது
செகிட்டு மெசினுடன் அவனின் உடலும்
தீயில் சேர்கிறது -சேவை செய்த
மெசினுக்குகூட அடக்கம் நடக்கிறது
குருடனின் பயணம் உதவிக்கு
தடியொன்று கேட்கிறது -அத்
தடியுடன் அவன் தேகம் சேர்ந்து
கொள்ளியில் வேகிறது -உதவிக்கு சென்ற
தடிக்கு கூட உபத்திரம் வருகிறது
செல்வந்தனின் பயணம்
பணம் பணமென -மனம்
அல்லும்பகலும் அலைபாய்கிறது -அவன்
சேர்த்ததை உண்ணாமல்
நள்ளிரவில் உயிரும் பிரிகிறது -பின்
ஆள்வது யாரென அடிபாடும் நடக்கிறது
படித்தவனின் பயணம்
பட்டம் பட்டமென பரிதவிக்கிறது
அடிபணியா அவனின் வாழ்க்கை
ஒருநாள் ஆடிப்போகிறது
படிப்பெல்லாம் பாரில் வைத்து உயிர்
தனியாய் பிரிகிறது
குடிகாரனின் பயணம்
குடித்தே குடலலுகிப்போகிறது -மதுவில்
நடித்த நடிப்பெல்லாம் மண்ணுள் போகிறது
எட்டுவரை அழுவர் பின் பம்பல்
அடித்து மகிழ்வர் -மதுவில் குளித்த
மாவீரனென்று நோபலா கொடுப்பார்கள்?
விலைமாதுவை தேடிய
கோவலனின் பயணம்
கொலையில் முடிகிறது -சிலம்புக்கு நீதிகேட்ட
கண்ணகியை கோபக்காரியாக்கியது
அலையலையாய் தாசியைசேரும் ஆடவர்
கூட்டம் அக்னியில் சேர்கிறது
வந்தவர் எல்லாம் தங்கிவிட்டால்
வருபவர்க்கு ஏது இடம்?-இக் குடி
வரவுக்கும் குடியகல்வுக்கும் வித்திட்ட
இறைவனின் வித்தை மட்டும் தொடர்கிறது
வந்தவர் ஒன்றும் கொண்டு போவது இல்லை
திண்ணமாய் தெரிகிறது
முதல் இருந்தால் முடிவிருக்கும்
பிறப்பிருந்தால் இறப்பிருக்கும்
முப்பது பிறப்பு உனக்கில்லை
இருப்பது ஒன்று !
முயற்சிசெய் மனிதனாக வாழ
முடிவுசெய் அதை இன்றே செய்ய !