ஆராய்ச்சிமணி!

மனுநீதிச் சோழமன்னன்
மாமன்ற ஆராய்சசிமணி
பசுவுக்கும் நீதி சொன்ன
பழைய உண்மை கேட்டோமோ!.

குற்றஞ் செய்தோன் மகனாயினும்
சுற்றம் பாராது நீதி செய்தான்.
பாலவயதுக் காரணமும்
பரிந்துரைக்க வில்லையவன்.

பதினெட்டுங் குறைந்தானென
விதியவனுக் குதவுமென்றால்!
வயதுங்கூடக் குற்றஞ் செய்ய
வாய்ப்பளிக்கக் கூடுமன்றோ!

சாட்சிகள் வலுவானாலே
சட்டங்களும் தண்டிக்கும்.
சாட்சியிருந்துஞ் சலுகையாலே
சட்டந் தர்மம் விலகலாகுமோ!

தில்லிகண்ட கொடுமையிலே
சொல்லொண்ணா வன்மைகளை
செய்தவனைச் சிறுவனென்றும்
சட்டமவனை விடலாகுமோ!

சட்டத்தையுந் திருத்தலாம்.
சண்டாளரைத் தண்டிக்கனும்.
விடமென்றறிந்த பின்னும்.
வீட்டுக்குள் ளொளிக்கலாமோ!

எழுதியவர் : கவிஞர்.கொ.பெ .பிச்சையா. (31-Mar-13, 9:46 am)
பார்வை : 126

மேலே