என் காதலின் பிரிவு என் காதலின் வலிகள் 555

பெண்ணே...

உன்னிடம் வார்த்தை
ஒன்று பேச...

மாதங்கள் பல
காத்திருந்தேன்...

உன் நிழலை போல்
உன்னை தொடர்வேன்...

நீ நின்று
பார்க்கும் நேரம்...

நான் எங்கோ
பார்த்தபடி என் பயணம்...

அப்போதாவது நீ
பேசிவிட மாட்டா...

ஏன் என்னை
தொடர்கிறாய் என்று...

சொல்ல தெரியாத
என் காதலை...

சொல்லாமல்
சொன்னேன் உன்னிடம்...

காதல் கொண்ட
என்னிடம்...

நீயும் காதலை
சொன்னாய்...

புதுவரன் உன்னை
தேடி வர...

எனக்கு கடிதம்
கொடுத்தாய்...

சொல்லாமல் சொன்ன
என் காதலுக்கு...

நீ சொல்லாமல்
சொன்னாய்...

காகிதத்தில் என்னை
மறந்துவிடு என்று...

என் காதலின்
பிரிவை...

விதி என்று
சொல்லி அழுவதைவிட...

என்னவென்று சொல்லி
அழுவேன்...

காகிதங்களை
மட்டும் நிரப்புகிறது...

என் காதலின்
வலிகளை.....

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (31-Mar-13, 2:44 pm)
பார்வை : 205

சிறந்த கவிதைகள்

மேலே