அழகே மனுசனுக்கு பிடிக்காது!

அழகைப் பார்த்தாலே
மனுசனுக்கு கொஞ்சமும் பிடிக்காது!

அழகான மலரைப் பார்த்ததும்
அதனை வாழ விடமாட்டான்!
உடனே பறித்துவிடுவான்!

அழகான காட்சியைப் பார்த்தால்
அதனை
புகைப்படத்தில் அடைத்துவிடுவான்!

அழகான பெண்ணைப் பார்த்தால்
பொறுக்காது
ஆசிட்டால் அபிஷேகிப்பான் அடங்காப்பிடாரி!

அழகான வயற்காட்டை வாங்கி
கொடுமைப்படுத்தி அதனை அழுக்காக்கி
மனையாக்கி விற்றுவிடும் வியாபாரி!

அழகுக்கும் அவனுக்கும் ஆகாது!
அதனால் தான்
அவன் மனது எப்பொழுதும்
அசிங்கமாகவே உள்ளதோ!

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (31-Mar-13, 7:15 pm)
சேர்த்தது : அ வேளாங்கண்ணி
பார்வை : 97

மேலே