டிசம்பர் 26.............................!!

அன்று.............
அலைகடலென புரண்டுவரும் உன்னைக்
கண்டு கண்களில் ஆனந்தம் மின்னின!

இன்று..............
அலைஉயர்ந்து ஆளுயரம் வளர்ந்து,
உயிர்களை உறிஞ்சிய உனைக்
கண்டு கண்களில் கண்ணீர் மின்னின!

நாங்கள்.......
கடலுக்குள் வலைதான் வீசினோம்,

ஆனால் நீயோ...........!!

எங்கள்
வாழ்க்கைக்குள் அலை வீசினாய்!

கருணைக் கடலென உன்னை
கையெடுத்துக் கும்பிட்ட நாங்கள்,
இன்று உன்னால் கண்ணீரைக்கூட
துடைக்கத் தோன்றாமல் நிற்கிறோம்.

இன்று வாழ்க்கை இழந்து,
உற்றார் உறவினர் இழந்து,
மருண்டு மலைத்து நிற்கிறோம்
உன் சீற்றத்தைக் கண்டு.........!

உன்னாலேயே உயிர் வாழ்ந்து
வந்த நாங்கள்....,,,
இன்று உன்னாலேயே உயிர் இழந்து
தவிக்கிறோம்,

உன் தண்ணீரைக் கொண்டு
எங்கள்
கண்ணீரை வாங்கிக் கொண்டாயே!

மனித உயிர்களா வேண்டும் உனக்கு?
ஒரு நொடி நீ சிந்தித்து இருந்தால்
ஓராயிரம் உயிர் காக்கபபட்டிருக்குமே!

இது யாரிட்ட சாபம்?

உனக்கு அப்படி என்ன கோபம்?

ஏனிந்த வேகம்?

தீர்ந்ததா உன் தாகம்?

இனிமேலும் கொள்ளாதே
எங்கள் உயிர் மேல் மோகம்!!

எழுதியவர் : messersuresh (31-Mar-13, 8:14 pm)
சேர்த்தது : புகழ் சுரேஷ்
பார்வை : 64

மேலே