காவலனுக்கு வணக்கம்
பிரிவின் துயரம் பிரியும் முன்னே
செலுத்தி விட்டாய் உன்
'புதுமை' அஞ்சலி..
மனதை மண்ணில் புதைத்த
அம்மிருகத்தின் உடல் மட்டும் உலகில் எதற்கு.?
காணிக்கையாக்கி விட்டாய் அக்குழந்தைகளுக்கு..
துன்புற்ற கண்களினை
துடைத்து விட்டாய் உன்
துப்பாக்கிக் கரங்களினால்..
"என்கவுண்டர்" என்னும் ஏழு எழுத்தால்
எழுதிவிட்டாய் ரத்த சரித்திரம்
கற்பித்தாய் புதிய பாடங்கள்..!!
தமிழன் குரல் திசையில்
காவல் தெய்வமாய் காட்சி தரும் உன்
காக்கிச்சட்டைக்கு
காலம் முழுதும் என் வாழ்த்துக்கள்..