நடைபிணமாக நான் 555

அழகே...
தென்றலோடு கலந்திருந்த
மலரின் மணத்தை...
ரசித்து கானகத்தில்
ஓர் பயணம்...
தொலைதூர பயணத்தில்
என்னருகில் நீ...
உன் பார்வை ஒன்று
என்னில் விழ...
என் இதயத்தில் ஓர்
காதல் உதயம்...
நித்தம் சந்திக்க
முடியாவிட்டாலும்...
மாதந்தோறும்
சந்திப்போம்...
நான் மறைந்துவிட்டால்
என்ன செய்வாய்...
என உதிர்த்தாய்...
உன் வார்த்தை கேட்ட
அந்த வினாடியே நான்...
நான்
இறந்துவிட்டேனடி...
நடைபிணமாக
உன் முன் நிற்பவனை...
நீ கண்டாயா.....