காதல் மறந்து

என் மரணத்தில்
நீ ஒரு
தருணம் பார்க்கிறாய்
ஒட்டி விட்ட காதலை
ஒதுக்கிவிடலாமோ??
ஒரு வினாடியில் ,,,,,,,,
விம்மி அழுது
விழி நீர் விட்டு
விரலால் துடைத்து
வீசுகிறாய்
விரைந்து போ
கல்லறைக்கு ,,,,,
காதல் அற்ற காவியமாய் நீ
கண் மூடி தூங்கு ,,,,,,,
கவலையின்றி காதல் மறந்து
வாழ்கிறேன்
கடைசி வரை ,,,,,,,,,,,,,,
கவிஞர்:
வி.விசயராஜா {மட்டு நகர் இளையதாரகை }