மறக்க முயல்கிறேன்..

காற்றே நீ பேசிவிடு,
கடந்த என் சோகத்தைத் தூது செய்து
என்னவளை ஏசிவிடு..

தீயை ஊனில் ஊன்றிவிட்டு,
என் தேகமோடும் உதிரம் கொண்டு,
காதல் தாகம் தீர்க்கும் பெண்ணவள் நினைத்து,
தீட்டிய தூது இங்கே உள்ளது..

விடுமுறை விட்டது இரவின் உறக்கும்,
வருடிய காற்றில் உந்தன் நெருக்கம்,
வாடா நினைவுகள் வஞ்சனை பாராது,
வாட்டி வதைத்தன எந்தன் இரவை..

கண் மூடிப் பேசும் கனவுகள் ஆயிரம்,
தள்ளாடிக் கொல்லும் நினைவுகள் ஒரு புறம்,
அல்லாடும் அவல மனதை வைத்து,
சொல்லாடும் காதல் கவிதை மட்டும் வடிப்பதென்னவோ..

இலையின் நுணியோ பனியைச் சுமக்கும்,
என் இமையின் துளியோ உன் நினைவைச் சுமக்கும்..
விழியின் துளிகள் காயும் நேரம்,
அவளை விளைந்த என் நெஞ்சம் துயரில் சாயும்..

எழுதியவர் : பிரதீப் (1-Apr-13, 7:43 pm)
பார்வை : 219

மேலே