வண்டி உருண்டோட அச்சாணி தேவை

வண்ணக்கிளி என்ற திரைப்படத்திற்கு, கவிஞர் மருதகாசி எழுதி,கே.வி.மகாதேவன் இசையமைப்பில் சீர்காழி கோவிந்தராஜன், பி.சிசீலா பாடிய ஒரு அருமையான பாடல். இப்பாடலுக்கு வெகு எளிமையான ஆடை அலங்காரத்தில் பிரேம் நசீர், மைனாவதி நடித்திருப்பார்கள்.

பாவாடை தாவணியில் மைனாவதியின் இளமைத் துள்ளலும், பிரேம் நசீரின் இயல்பான, அடக்கமான நடிப்பும் காட்சிகளுக்கு மெருகூட்டுகின்றன. பாடலும், காட்சிகளும் இயல்பாகவும் ரசிப்பதற்கு மிக அருமையாகவும் இருக்கின்றன. யு ட்யூபில் பார்த்தும், கேட்டும் ரசிக்கலாம்.

வண்டி உருண்டோட அச்சாணி தேவை
என்றும் அதுபோல வாழ்க்கை ஓடவே
ரெண்டு அன்புள்ளம் தேவை (வண்டி)

சொந்தம் கொண்டாடவென்று அன்பு கொண்டு
சோக்கு மாப்பிள்ளை வாராரே இன்று.....
சோக்கு மாப்பிள்ளை வாராரே இன்று

வந்தாலும் பலன் இல்லையே
அன்பைத் தந்தாலும் அதை வாங்க ஆள் இல்லையே
(வந்தாலும்) (வண்டி)

நிலவைக் கண்டு மலரும் அல்லி
விளக்கைக் கண்டு மலருமா? (நிலவைக் கண்டு)

உலகம் கொண்டாடும் சூரியன் வந்தாலும்
உண்மை இன்பம் கொண்டாடுமா?

விளங்கும்படி சொல்லம்மா
வெண்ணிலவு யாரம்மா
வேலைக்காரன் எனக்கு அது புரியுமா? (விளங்கும்படி)

என் வேலையை நான் பார்க்க வேணும் தெரியுமா?
சும்மா வெளையாட வேணாம்
அதைக் கொடம்மா கொடம்மா... (வண்டி)

வம்பு ஏனம்மா... வாங்க.. அதைத் தாங்க..
வந்த வழி பார்த்து நேராகப் போங்க
நீங்க வழி பார்த்து நேராகப் போங்க

வழி பார்த்து நான் போகவே
எந்தன் மனம் நாடும் நிலவாகி வழி காட்டுங்க (வழி பார்த்து)

ஆ!

ம்ம்ம்

வண்டி உருண்டோட அச்சாணி தேவை
என்றும் அதுபோல வாழ்க்கை ஓடவே
ரெண்டு அன்புள்ளம் தேவை

ம்ஹூம்... (வண்டி)

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (1-Apr-13, 11:40 pm)
பார்வை : 556

சிறந்த கட்டுரைகள்

மேலே