பெண்ணவள் அழகு...!!!

சிணுங்கும் அவள் பற்கள்,
சீரான வரியிலே,
முனங்கும் என் நெஞ்சம்,
முரண்பட்ட சிந்தையிலே..

அவள் புன்னகையில் சிக்கி விட்டேன்,
மூச்சடைக்க விக்கி நின்றேன்..
அவள் சிரிப்பும் கைதானதே,
எனைக் கொன்று புதைத்து விட்டதனாலே..

நெற்றியாடும் கத்தை மயிற்றை,
அவள் ஒற்றை விரலில் ஒதுக்கி விட,
மற்ற மயிரும் கூடி நிற்கும்,
அவள் ஒதுக்கும் விசையை அள்ளி நுகர..

விழி மழை நீரோ
கண்கள் கீழே வழிய,
புருவக் குடைதன்னை
மேலே வைத்தவன் யாரோ..

பாவை இவள் நிழல் கூட,
பாய்ந்து மண்ணில் படுவதில்லை..
அவள் வடிவின் மீது காதல் கொண்டு,
மேனி மீதே படியும் போல..

துள்ளித் திரியும் மயிலைப் பிடித்து,
அதன் தேகமெங்கும் வண்ணமடித்து,
ஒட்டிக் கொள்ள சிறு பசையை விட்டு,
நெற்றிப் பொட்டில் நட்டு விட்டாள்..

அழகு பற்றி கவிதை ஒன்றை,
பிரம்மன் வடித்து முடிக்க நினைத்தான்..
ஆனால்,
முடிக்கத் தெரியாமல் திண்டாடி நிற்க,
அதன் முற்றுப் புள்ளியாய் அவளை வைத்தான்..

எழுதியவர் : பிரதீப் (4-Apr-13, 9:59 am)
பார்வை : 108

மேலே