கற்பு. 46

கற்பு.

கற்பு இன்னதென்று
அறியாதிருந்தேன்.
கற்பை எனக்கு அவள்தான்
கற்றுக்கொடுத்தாள்.

கணவன் வாய்சொல் மீறாமல்,
புகுந்த குடிமரபு மாறாமல்.
எவள் வாழ்வளோ ?
அவளே கற்பினளாம்!

குடும்ப வாழ்வில்லா அவ்வை ,
போதித்த கற்புநெறி இவை.
கற்பெனப் படுவது
சொற்றிரம்பாமை.

கொண்டவன் வாய்சொற்ப்படி,
தாண்டாள் தலை வாசற்ப்படி.
கண்டவன் கண்,கை படும்படி,
மேனி மினுக்கல் தப்படி.

பெண்ணுக்கு ஒழுக்கம் முதல்
கற்ப்புமுண்டாம்.
ஆணுக்கு ஒழுங்கும் பிறன்மனை
நோக்கா பேராண்மையுண்டாம்.

கற்பெனப் படுவது உடலால்
மட்டுமல்ல. உளத்தானும்
களங்கமில்லாமலிருப்பதுவேயாம்.
கீதாவின் கேள்விக்கும் இதுபதிலாம்.


எய்ட்சை ஏமாற்ற
கற்பை காப்பாற்றுவோம்.
கற்பு முக்கியமா?
கேள்வி கேட்கப்பட்ட நாள்
26.03.13

ஜோசப் கிரகரி ரூபன்.

எழுதியவர் : ஜே.ஜி.ரூபன். (5-Apr-13, 12:45 pm)
சேர்த்தது : ரூபன் ஜோ கி
பார்வை : 111

மேலே