மனம் திறக்கிறேன் (ஏமாற்றும் மனது)

மனம் திறக்கிறேன் (ஏமாற்றும் மனது)

அறைதனை சாத்திக்கொண்டு
அடைப்படும் வலிகள்
சத்தமின்றி முழுங்குகிறது
வார்த்தைகள் திறக்காமல்
வழிந்தோடும் விழியாற்றினை

நிலைக்கொள்ள முடியாமல்
நிற்கின்ற கால்களும்
நான்கு சுவர்களினுள்ளே
நடமாடித் திரிகிறது
எதற்கென்றே தெரியாமல்

அறுபடும் நூலில்
அழகிய வண்ணங்கள்,,,
அந்தரத்தில் தொங்குகின்ற
அசைப்போடும் ஆசைகள்,,,
அவிழுகின்ற நிலையிலும்
ஆட்கொள்ளும் கனவுகள்

ஆறுதல்கள் தேடி
அலைகின்ற மோனங்கள்
உடைபடும் பொழுதுகளில்
வெளிப்படும் ஓசைகள்
நடுநிலை உணர்விழந்த
வேதனைப் புலம்பல்கள்

அழகான பரிசுகளும்
அழுகின்ற சில நேரம்
ஆசுவாசம் அளிப்பதில்லை

அறிகின்ற மனங்களும்
அருகிருக்கும் சிலநேரம்
அரிதாகப் படுவதில்லை

விலகிச்சென்ற கணங்களே
விரலற்ற விரக்திகள்
விட்டு விட்டு மீட்டுகின்ற
விடையறியா விரிசல் ராகங்கள்

செவிகளை மூடுகின்ற
மெல்லிய பாடல்களாய்
அலசிச் செல்லுகின்ற
அடிப்பட்ட அகமனது,,

நடனமிடும் நாற்காலியில்
அரைநொடி கேட்டப்படியே
அங்கம் சாய்கையில்
சோகங்கள் துறந்துவிடாதா ,,,

அனுசரன்

இதை எழுதிய நோக்கம் பெரும்பாலும்
சந்தோஷங்களில் பொழுதுகளை கழிக்கும்
மனங்களுக்கு உண்மை அன்பு மனங்களின்
உணர்வுகள் புரிவதில்லை உறவுகளே
நேசிப்போம் அனைவரின் உணர்வுகளையும்

எழுதியவர் : அனுசரன் (8-Apr-13, 4:57 pm)
பார்வை : 127

மேலே