சும்மாவரவில்லை சோறு!

அம்மா தருஞ் சோறு!
சும்மா வரல சாரு!!.
அதற்குப் பின்னால் பாரு!
அடங்கியிருக்கு நூறு.!

ஆதிமனிதன் யாரு!
அவன்கொடுத்தான் சோறு.!.
எதையெதத்தான் திண்ணானோ!
எத்தனை பேர் செத்தானோ!

ஒன்னொன்னாத்தான் தேடித்தான்.
மென்னு திண்ணு பார்த்துத்தான்.
உண்ணலானு சொன்னதத்தான்
உண்ணுகிறோஞ் சாமி!

நெருப்புக்கண்ட பின்னாலே
பருப்பு வேககக் கண்டானே .
தரிசக்கொத்தி விதைவிதைச்சி
தானியங்கள் கொண்டானே .

அம்மா தருஞ் சோறு!
சும்மா வரல சாரு!!.
அதற்குப் பின்னால் பாரு!
அடங்கியிருக்கு நூறு.!

எழுதியவர் : கவிஞர்.கொ.பெ.பிச்சையா.. (8-Apr-13, 4:34 pm)
பார்வை : 114

மேலே