பணம்

வளமையும் படைத்தான் ,
வறுமையும் படைத்தான் ,
வாழக்கையை வாழும் வாய்ப்புகளிலே ,
ஏற்ற இறக்கங்கள் ஏனோ படைத்தான்!

காசே இன்றைய உலகத்தின் மூச்சு,
மனிதனின் பொழப்பு இயந்திரமாய் ஆச்சு ,
உறவுகள் எல்லாம் ஓரம் போச்சு ,
காசேதான் பெரிதாய் ஆச்சு !

கருணை கடவுள் கல்லாய் போக ,
காசு கடவுளே உலகமாய் ஆனது ,
பேசும் தெய்வம் பேசாமல் போக ,
காசே , கடவுள் அவதாரமாய் ஆனது!

ஜனனம் தொடங்கி மரணம் வரையில்,
சில்லறைதானே உலகை ஆளுது ,
காசு இருந்தால் தேடும் சொந்தம் ,
கரைந்துபோனால் மறைந்து போகுது !

அண்ணன் தம்பி அன்பாய் இருப்பான் ,
காசுக்காக நெருப்பாய் கொதிப்பான் ,
பாசம் கூட காசைக்கண்டால் ,
தூரம் போயி நின்னு கொல்லுது !

உடைகள் பார்க்கும் , உயர்வை பார்க்கும் ,
உள்ளம் பார்க்கா உலகம் இதிலே ,
இருப்பவன் கை கொடுக்க மறுக்கும் ,
கொடுப்பவன் கையை பணம் மறுக்கும் !

சுகத்தை தேடி பணம் ஓடுது ,
வயித்துக்காக மனம் மாறுது,
இருட்டை தேடி ஓடும் உலகில்
இருட்டில் மடியும் சத்திய பெண்கள் !

கடவுளையும் தரிசிக்க அர்ச்சனை சீட்டு ,
காசு கொடுத்தால் கையில் பிரசாதம் ,
சில்லறை மறுத்தால் தொல்லைகள் தந்து ,
ஏசும் நிலையில் பிச்சைக்காரன் !

ஊரே சுத்துது உலகமும் சுத்துது ,
எல்லாம் இந்த காசுக்காக ,
ஓய்வில்லாமல் உழைத்தும் காசு தங்கள
நேர்மையாய் வாழும் மனிதர்களிடத்தில் !

ஏமாற்றி உழைக்கும் உலகம் இதனில் ,
எமனாகி கொல்லுது பணத்தின் கொடுமை ,
ஒற்றை ரூபாய்க்கு ஒருத்தன் சாகுறான் ,
நூறு ரூபாய்க்கு பலரை கொல்லுறான் !

காசே கடவுள் ஆகி போய்விட ,
கடவுள் கூட கண்ணுக்கு தெரியல ,
தினம் தினம் ஒடையுது எத்தனையோ உண்டி ,
களவு போகுது கடவுள் நகையும் !

காசு கிடைத்தால் கண்ணை மறைக்குது ,
நீதியும் கூட தோற்று போகுது ,
போராசைகள் கொண்ட உலகத்திலே ,
கடவுளை கூட காட்டி கொடுக்கிறான் !

எழுதியவர் : வினாயகமுருகன் (8-Apr-13, 4:08 pm)
சேர்த்தது : VINAYAGAMURUGAN
பார்வை : 299

மேலே