நோயின்றி வாழ

சோளமும் கம்பும்
கேழ்வரகும் தினையும்
மூலிகை மருந்து செடிகளெல்லாம்
நம்ம ஊருல ஊருநெடுக வயல் நெடுக
விளைஞ்சதுன்னு சொன்னாக
அந்த காலத்துலதான் சொன்னாக
நம்ம மூதாதையரும் சொன்னாக
தெம்பான உணவுண்ணும் சொன்னாக
நோயின்றி வாழலாமுனு சொன்னாக ...!

நாம் நூறாண்டு வாழலாமுனு சொன்னாக
அந்த ரகசியத்தையும் சொன்னாங்க
எந்த நாட்டுலயும் இல்லன்னு சொன்னாக
எந்த ஊருலயும் இல்லன்னு சொன்னாக
நம்ம நோயின்றி வாழலாமுனு சொன்னாக ...!

நம் சந்ததிக்கும் ஆரோக்கியம் நு சொன்னாக
நம் பணக்கார நோயுக்கும்
விரோதின்னு சொன்னாக !
நம் வாழ்க்கைக்கு ஆணிவேருனு சொன்னாக
நம்ம நோயின்றி வாழலாமுனு சொன்னாக ...!

நம்ம தங்கமணி வைரமணிய
பயிரிடனுமுனு சொன்னாக
நம்ம ஊரறிய விளையனுமுனு சொன்னாக
நம்ம நாடு செழிக்குமுனு சொன்னாக
நம்ம நோயில்லாம வாழலாமுனு சொன்னாக ...!

நம்ம நூற்றுபத்து வயசு பாட்டிமார போல
நல்லா வாழலாமுனு சொன்னாக
நாம நீண்ட ஆயுளுடன் வாழலாமுனு சொன்னாக
நாடு செழிக்கனும் நம்ம உயிரையும் காக்கணும்
நாம நோயில்லாம வாழலாமுனு
நாம எல்லாருமே சொல்வோங்க
நோயின்றி வாழலாமுனு சொல்வோங்க..!

எழுதியவர் : ஜெய ராஜரெத்தினம் (9-Apr-13, 6:21 am)
பார்வை : 715

மேலே