(12) தந்திர காட்டில் நான் (2)விதைக்காத விதையில் விளைந்த மரம் நான்
=============(தொடர்ச்சி )====================
(2) விதைக்காத விதையில் விளைந்த மரம் நான்
நிறுத்துக சிரிப்பை -என்றேன்
மரத்திடம் மெல்ல
மீண்டும் மரமோ
அன்பே என்றது -ஆத்திரம்
வேண்டாம் என்றது !!!!!!!!
மீண்டும் சலசல வென்று சிரித்துவிட்டு
அன்பே ,
அறிவியல் அறிந்த அறிஞரா நாங்கள்
சாஸ்திரம் பயின்ற பண்டிதரா நாங்கள்
ஜோதிடம் பயின்ற ஜோதிடரா நாங்கள்
பரிகாரம் கேட்கிறாய் நீ
பாவம் செய்யாதவர்
எல்லாம் தூயாத்மா என்றால்
பாவம் அறியாதவர்
எல்லாம் பரமாத்மா அன்றோ !!!!!!!
உனது சொந்த ஒளியில்
உனது சொந்த வழியில்
பாதையை அமைத்து கொள்
அதுவே நிரந்தரம்
அதுவே சத்தியம்
அதுவே சுதந்திரம்
அன்பே ,
தைரியத்தோடு அந்த பேரொளியை
விழுங்கிவிடு
பேரொளியாகவே நீ மாறிவிடு
அதுதான் பாதை
அதுதான் பரிகாரம்
அதுதான் அமைதி
சத்தியம் சமீபமாய்
இருப்பதை எண்ணி
மகிழ்வாய் நீ !!!!!!!!!!1
செல்
செல்லவிடு
தடுக்காதே எதையும் தடுக்காதே
உனது வேலை
ரசிப்பதுதான்
மாற்றி அமைப்பதோ பரிகாரம்
சொல்வதோ அல்ல !!!!!!!!
பாவம் செய்யவும் வேண்டாம்
பாதுகாக்கவும் வேண்டாம்
ஆகையால் இங்கிருந்து செல்
விரைவில் குகையை அடைவாய் நீ!!!!!!!!
=============(தொடரும் )====================
அன்புடன்
கார்த்திக்