அறுவடை

முப்போகம் விளைவித்தும் ,
ஒருவேளை கஞ்சிதான் ,
அறுவடையை முடிப்பதற்குள்,
நாங்கள் கருவாடாய் போகிறோம் !

ஒரு போகம் மழையடிக்க ,
மறுபோகம் வெய்யிலடிக்க ,
பனிகூட ஒரு போகம் பாழாய் ஆக்குது !

ஆத்தாற்று வெள்ளம் அதை ,
அனைதடுத்து நீர் பாய்ச்சி ,
கண்முழித்து காத்திருந்து ,
பயிரதனை வளர்த்து வந்தோம் !

அணை சண்டையிலே,
ஆற்று நீரும் வற்றிப்போக,
பற்றாக்குறை நீருக்கு,
பம்பு செட்டு தேடி போனோம்!

பம்பு செட்டு நீருக்கும்,
பற்றாக்குறை மின்சாரம்,
ரெண்டும் கெட்ட நிலைமையிலே ,
பயிர் வளர பாடுபட்டோம் !

உயிர்குளிர பயிர்வளர ,
உள்ளம் அது மெல்ல தேற ,
மருந்தடிக்க காசு இல்ல ,
மனைவி தாலி அடகுக்கு போச்சி !

ஆள் வைத்து பயிர் செய்து ,
அறுவடை நேரம் வர ,
விளைவித்த மொத்த பயிரையும்,
விலைக்கு கொண்டுபோனோம்!

கடன்வாங்கி வைத்த பயிரை,
கடன் சொல்லி கொண்டுபோனான் வியாபாரி,
திரும்பி வர மாதமாச்சு ,
எங்கள் நிலை மோசமாச்சு !

வாங்கிய காச எண்ணிப்பார்த்து ,
வீட்டு வாசல் தாண்டல ,
கடன் காரன் வந்து நின்னு,
காசெல்லாம் வாங்கிகிட்டான் !

முதல் போட்டு தொழில் செய்யும்,
முதலாளி நாங்கள் இல்லை,
கடன் பட்டோம் , அசல் தீர்த்தோம் ,
வட்டி இன்னும் அடையலே !

பயிர் செய்து அறுவடையில்,
மிச்சம் ஒன்னும் நிற்கல,
பாவம் வழியின்றி அறுவடையாய்,
எங்கள் கூட்டம் மடியுது !

எழுதியவர் : வினாயகமுருகன் (11-Apr-13, 4:59 pm)
சேர்த்தது : VINAYAGAMURUGAN
பார்வை : 119

மேலே