மீண்டு எழுதல்
உவகைகளில் மயங்கும் நான்
தினம் ஒரு கனா காண்கிறேன்...
தன் இருப்பிலிருந்து கிளம்பி..
முடிவற்ற வானத்தின்..
தூரத்தை தொட துடிக்கும்..
ஒரு சிறு பறவையாய்..
சிறகு விரிக்கிறேன்....!
உச்சத்திலிருந்து உலகை பார்க்கும்..
நொடிகள் தரும் சிலிர்ப்பை...
உணர்கிறேன்...!
சுழற்ற்றும் காற்றின்...
வேகங்கள் எதிர்த்து..
பறந்து அலைகிறேன்..!
அகங்காரம்,கர்வம் ,திமிர்
என்னும் கணங்கள் இறக்கி...
கனமற்ற உயிராய்..
காற்றில் மிதக்கிறேன்...!
ஒவ்வொரு நாளும்..
உய்வுற்றிருக்க..
என் இரை தேடி..
வலம் வருகிறேன்..!
இயற்கை மீதேறி..
வாழ்வு கடக்கிறேன்..!
அந்தி வானில்..
அடர்ந்த வனத்தில்..
அழகான மரத்தில்....
நான் கட்டிய கூட்டில்..
வந்து இறங்குகிறேன்...!
இரவு விடிய...
கூட்டில் உறங்கி..
அதிகாலை விழிக்கையில்...
சிறகுலர்த்தி எழுகிறேன்...!
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
