இலவசம்

ஆட்சியை பிடிக்க
அரசு அறிவித்தது இலவசம்!

மாவறைக்க கிரைண்டரும்,
சட்டினிக்கு மிக்சியும் ,
காற்று வாங்க பேணும்,
விவசாயத்திற்கு இலவச மின்சாரமும் !

வாங்கி வைத்த ஏழைகளுக்கு,
வந்தது எல்லாம் சந்தோசமே,
குடிசையில் வாழும் ஏழை வீட்டையும்
அழகாய் அலங்கரிக்க !

மாவறைக்க ஆசைப்பட்டால்,
வீட்டு பெண்மணி,
அரிசியை அரைப்பதற்கு ஆறுமணி நேரமும் ,
உளுந்திற்கு ஒன்றரை மணி நேரமும்,
சட்டினி அரைப்பதற்கு பொழுதே விடிந்து போச்சு !

கடன் வாங்கி போர் போட்டு ,
பம்புசெட்டும் அதில் அமைத்து ,
இலவச மின் இணைப்பை,
இணைத்தபோது மின்சார வாசனையே,
மின் கம்பத்தில் காணோம் !

கண் இமைக்கும் நேரத்தில்,
கனவெல்லாம் பொடிப்பொடியாய்,
உட்கார்ந்தான் விவசாயி,
உருகிப்போய் மனமுடைந்தான் !

அரசாங்க அறிவித்த ,
பொருள் எல்லாம் கிடைச்சுடுத்து,
ஒன்று மட்டும் அவர்கள் வாக்கில் இல்லை ,
முழுநேர மின்சாரம் !

எழுதியவர் : வினாயகமுருகன் (11-Apr-13, 5:35 pm)
பார்வை : 96

மேலே